போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan 26.06.2015

Ref : Nanayam Vikatan Tamil Magazine  Dated 26.06.2015

Question :

ஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்

Answer :

போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்


க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

போனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.

மேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு  நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.

இதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான்! அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள்.  அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.

உதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.

அப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.
-- 

பங்கு எவ்வளவு விலை இறங்கும் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan - Dated 05.06.2015

Ref : Nanayam Vikatan Tamil Magazine  Dated 05.06.2015

Question :

ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிா்ப்பாா்ப்பை பூா்த்தி செய்யாதபோது, அந்த நிறுவனத்தின் பங்கு எவ்வளவு விலை இறங்கும் என்பதை எப்படி கண்டுப்படிப்பது?


Answer :

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதன் பங்குகள் சுமார் ஒரு வார காலம் முன்னதாகவோ அல்லது முந்தைய நாளிலிருந்தோ ஏறத் தொடங்கிவிடும். இத்தகைய காலத்தில் அதன் தேவைப்பாடு (Demand) இயல்பு நிலையிலிருந்து சற்று அதிகமாக காணப்படும். அதற்கேற்ப அதன் விலையும் சிறிது சிறிதாக ஏறிக் கொண்டிருக்கும்.
காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாளன்று அதன் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யாதபோது தேவை மற்றும் விநியோக (Demand & Supply) அடிப்படையில் இறங்கத் தொடங்கிவிடும். இந்த இறக்கம் என்பது அந்த முடிவுகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் அதன் எதிர்பார்ப்புக்கேற்ப எவ்வளவு விலை ஏறியதோ அதே அளவுக்கு இறங்கவும் வாய்ப்புண்டு. ஒரு வேளை அந்த முடிவுகள் மிக மோசமானதாக இருந்தால் அதன் பாதிப்புத் தன்மைக்கேற்ப பங்கு விலை இன்னும் அதிகமாக கீழிறங்கும் நிலையும் ஏற்படலாம். ஆனால் இந்த விலைச்சரிவு நிலையானதல்ல மற்றும் திடீரென்று ஏற்படும் இந்த விலைச்சரிவை அளவீடு செய்ய துல்லியமான அளவுகோல்களும் கிடையாது.

நீண்டகால முதலீடு செய்பவர்கள் வெறும் காலண்டு முடிவுகளை மட்டும் வைத்து அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்வது சரியாக இருக்காது. சுமார் 5 வருட காலத்தின் வருடாந்திர முடிவுகளை (Annual Result) வைத்து ஆராய்ந்த பின்னரே ஒரு நிறுவனத்தின் முழுமையான செயல்திறனை நம்மால் கணிக்க முடியும்.

புத்தக மதிப்பு (Book Value) - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan Tamil Magazine Dated 22.05.2015

Ref : Nanayam Vikatan Tamil Magazine  Dated 22.05.2015

Question :

பங்குச் சந்தையில் புக் வேல்யூ என்று சொல்லப்படும் புத்தக மதிப்பை ஒரு பங்கிற்கு எப்படி கணக்கிட வேண்டும்.பல வலைதளங்களில் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. எனவே தயவுசெய்து  உதாரணத்தோடு விளக்கவும்.



Answer :

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

ஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) என்பது அதன் உண்மையான சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து அந்த நிறுவனம் வாங்கிய கடன்களைக் கழித்துக் காணப்படும் மதிப்பே அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பாகும்

உதாரணமாக, ஒரு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 60 லட்சத்துக்கு கடனும் வைத்திருந்தால் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு 20 லட்சம்  (80 லட்சம் -- 60 லட்சம்) ஆகும். இதனாலேயே ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல நிலையில் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.

நாம் புத்தக மதிப்பினை ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு (Balance Sheet) என்ற அறிக்கையினை  ஆராய்ந்து அறியலாம்.புத்தக மதிப்பினை வைத்து அதன் பங்கு விலை நல்ல மதிப்புடன் உள்ளதா? இல்லையா? என்றும் அறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் மொத்தம் 20,000  பங்குகளையும், புத்தக மதிப்பு 20,00,000 ஆகவும் கொண்டிருப்பதாக கொள்வோம். இப்போது ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு  என்ன என்பதை பின்வருமாறு கணக்கிடலாம்

Book Value per share = Book value / Total No. of outstanding shares.
ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக்கை
ஒரு பங்கின் புத்தக மதிப்பு = 20,00,000 / 20,000 = ரூ.100.

Book Value = Total Assets – (Intangible (Patents, Goodwill & etc.,) Assets + Liabilities)
Total No. of outstanding shares = Total No. of Equity Shares – Total No. of Preference shares

Z’ தர நிறுவனங்கள் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan Tamil Magazine : 08.05.2015

Ref : Nanayam Vikatan Tamil Magazine  Dated 08.05.2015

Question: விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies)டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் இஸட் குரூப்பில் வர்த்தகமாகும் என்று நண்பன் சொன்னான்.இதை விளக்கிச் சொல்ல முடியுமா ?

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

Answer :

 ‘Z’ தர நிறுவனங்கள் என்பவை பங்கு சந்தையின் பட்டியலிடுவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றாமலோ அல்லது முதலீட்டளர்களின் புகார்களை நிவர்த்தி செய்யாமலோ இருக்கின்ற நிறுவனங்களை குறிக்கும்.

மேலும் சி.டி.எஸ்.எல் (C.D.S.L) அல்லது  என்.எஸ்.டி.எல் (N.S.D.L)--ல் பங்குகளை டிமேட் (Demat) செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தவறிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இந்த வகை பங்குகள் பல்வேறு அடிப்படைகளில் ஒருவேளை அபாயகரமனதாகவும் இருக்கலாம்.

1. முதலாவதாக, பொதுமக்களிடையே இந்த நிறுவனங்களை பற்றிய போதுமான தகவல்கள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இவைகளை கண்காணிப்பது மிகவும் கடினம்.

2. இரண்டாவதாக, ஊடகங்களில் சேகரிக்கும் செய்திகள் குறைவாக இருப்பின் பொதுவான ஆய்வுகளில் இருந்து இவற்றைப் பற்றிய தகவல்கள் மறைக்கப் பட்டிருக்கும். இது இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய இன்சைடர் டிரேடிங்கை (Insider Trading) செய்வதற்கான வாய்ப்பாக உருவாகிவிடும்.

3. மூன்றாவதாக இந்த நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டாளர் புகார்களை நிவர்த்தி செய்வதில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது.

இவ்வகையான பங்குகள்  டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் ‘Z’ குரூப்பில் வர்த்தகமாகும்

'டிரேட் பார் டிரேட்' என்பது கட்டாய டெலிவரி முறையில் மட்டுமே  வர்த்தகமாகும். அதாவது 'டிரேட் பார் டிரேட்' பங்குகளை தினசரி (Intraday) வர்த்தகம் செய்ய முடியாது