Z’ தர நிறுவனங்கள் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan Tamil Magazine : 08.05.2015

Ref : Nanayam Vikatan Tamil Magazine  Dated 08.05.2015

Question: விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies)டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் இஸட் குரூப்பில் வர்த்தகமாகும் என்று நண்பன் சொன்னான்.இதை விளக்கிச் சொல்ல முடியுமா ?

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

Answer :

 ‘Z’ தர நிறுவனங்கள் என்பவை பங்கு சந்தையின் பட்டியலிடுவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றாமலோ அல்லது முதலீட்டளர்களின் புகார்களை நிவர்த்தி செய்யாமலோ இருக்கின்ற நிறுவனங்களை குறிக்கும்.

மேலும் சி.டி.எஸ்.எல் (C.D.S.L) அல்லது  என்.எஸ்.டி.எல் (N.S.D.L)--ல் பங்குகளை டிமேட் (Demat) செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தவறிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இந்த வகை பங்குகள் பல்வேறு அடிப்படைகளில் ஒருவேளை அபாயகரமனதாகவும் இருக்கலாம்.

1. முதலாவதாக, பொதுமக்களிடையே இந்த நிறுவனங்களை பற்றிய போதுமான தகவல்கள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இவைகளை கண்காணிப்பது மிகவும் கடினம்.

2. இரண்டாவதாக, ஊடகங்களில் சேகரிக்கும் செய்திகள் குறைவாக இருப்பின் பொதுவான ஆய்வுகளில் இருந்து இவற்றைப் பற்றிய தகவல்கள் மறைக்கப் பட்டிருக்கும். இது இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய இன்சைடர் டிரேடிங்கை (Insider Trading) செய்வதற்கான வாய்ப்பாக உருவாகிவிடும்.

3. மூன்றாவதாக இந்த நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டாளர் புகார்களை நிவர்த்தி செய்வதில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது.

இவ்வகையான பங்குகள்  டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் ‘Z’ குரூப்பில் வர்த்தகமாகும்

'டிரேட் பார் டிரேட்' என்பது கட்டாய டெலிவரி முறையில் மட்டுமே  வர்த்தகமாகும். அதாவது 'டிரேட் பார் டிரேட்' பங்குகளை தினசரி (Intraday) வர்த்தகம் செய்ய முடியாது